Skip to main content

Posts

Showing posts from December, 2017
பேரூர் (9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்) கரிகால் சோழன் காலத்தில்  நொய்யல் ஆற்றுப் படுக்கையில் ஆதம விதிப்படி கட்டப்பட்டது இந்த பட்டீஸ்வரர் ஆலயம். தேரும் யானையும் கொண்ட கோயிலும்கூட. நொய்யல் நதிக்கரையோரம்  அமைந்துள்ளதால் இங்கு  இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. கோவையின் சிறப்புக்களில் இதுவுமொன்று. இது காந்திபுரத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. வழிபாட்டு நேரம்: காலை: 6.0 - 1.0 மாலை: 4.0 - 9.0 தொடர்புக்கு: 0422-22607991
மருதமலை (12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்) முருகா! எப்படியோ சின்னப்பதேவரின் மூலம் உனது கோயிலைபுரணமைத்துவிட்டாய். 2700 அடி உயரம் கொண்ட மேற்குமலை தொடர்ச்சியில் 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது மருதமலை. மலையில் அதிகமாய் மருதமரம் நிறைந்திருந்ததால் அப்படி பெயர் வந்திருக்ககூடும் என தகவல். அதனருகில் பாம்பாட்டி சித்தர் வாழ்ந்ததாக கூறும் ஒரு குகையும் உள்ளது.( தான்தோன்றி விநாயகர் கோயில்). இது காந்திபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. கோவை சிறப்புக்களில் இதுவுமொன்று. வழிபாட்டு நேரம்: காலை 5.30-1.0 மாலை 2.0 - 8.30 தொடர்புக்கு: 0422-2422490.
கோவை மேற்கு தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோவை. மிதமான தட்பவெப்ப நிலையும் எவ்வளவு வெய்யிலிலும் வியிற்காத சீதோஷ்ண நிலையும் கொண்ட ஊர். பழங்குடியினர் கோசலர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததாகவும், கோவன் என்ற அரசன் ஆண்டதாலும் கோவன்புதூர் என்று அழைக்கப்பட்டு பின்னாளில் மறுவி கோயம்புத்தூர் என்று மாறியதாக ஒரு வரலாறாம் புவியியலாம்...